தாம்பரம், ஜுன்,1: கல்லூரி மாணவியிடம் தோஷம் கழிப்பதாக கூறி அவர்அணிந்திருந்த செயினை பறித்து சென்ற ஆசாமியை போலீசார்கைதுசெய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆசனமாப்பேட்டை, தேரடி தெருவை சேர்ந்தவர் வளர்நேசன். இவரது மகள் மதுமதி (21).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் சித்த கல்லூரியின் விடுதியில் தங்கி 4ஆம் ஆண்டு சித்தமருத்துவம் படித்துவருகின்றார்.

இந்நிலையில் கடந்த மாணவி தாம்பரம் சானடோரியத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக கல்லூரி பேருந்துக்கு காத்திருந்தபோது அங்கு வந்த 50 வயது மதிப்புடைய ஒரு நபர் உனக்கு தோஷம் உள்ளது. அந்த தோஷத்தை பூஜை செய்து எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ராமர் கோவிலுக்கு மாணவியை அழைத்து சென்றஅவர் மாணவிடம் கழுத்தில் அணிந்துள்ள செயினை கழற்றி கொடுத்துவிட்டு கோவிலை மூன்று முறை சுற்றிவரும்படி கூறியுள்ளார்.

இதனை நம்பி மாணவியும் தான் அணிந்திருந்த மூன்றரை சவரன் செயினை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துவிட்டு கோவிலை மூன்று முறை சுற்றிவந்து பார்த்தபோது அந்த நபர் மாயமாகி விட்டார்.

இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் நகை பறித்துச்சென்ற நபர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது48) என்பது தெரியவந்தது.இதுகுறித்து உதவி ஆணையர் அசோகன் சென்னை வரை தேடி வந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.