சென்னை, ஜூன் 1: ஏர்இந்தியா விமானம் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள்பெரும் அவதிப்பட்டனர். நேற்றிரவு டெல்லியிலிருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.15மணிக்கு 7மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தது.

இதனால் பயணிகளை வரவேற்க வந்தவர்களும், பயணிகளும், தாமதத்தின் காரணமாக மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
இதுகுறித்து விசாரித்த போது இணை விமானம் வராததால் 7மணிநேரம் விமானம் தாமதத்திற்கான காரணம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.