சென்னை, ஜூன் 1: சென்னை- மதுரை இடையே 8 வழிசாலை தேவை என்றும், தலைநகருக்கும், சேலத்திற்கும் இடையே அவசியமில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற உள்ள காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற் பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-சென்னையிலிருந்து சேலத்திற்கு எட்டு வழி சாலை மீண்டும் வரும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது அப்பகுதி மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை-சேலத்திற்கு ஏற்கனவே இரண்டு வழிகள் உள்ளன.மத்திய அரசும், மாநில அரசும் மக்களின் எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.சென்னை-மதுரை 8 வழிசாலை அமைத்தால் தென்மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரபிரசாதமாகும். இவற்றை நாங்கள் வரவேற்கிறோம்.

சென்னை- மதுரை இடையே 8 வழிசாலை தேவையானது. சென்னைக்கும், சேலத்திற்கும் இடையே அவசியமில்லை.தமிழக மக்களின் வேலை வாய்ப்பை பொறுத்தவரை மத்திய- மாநில அரசுகள் எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் புதிய தொழிற்சாலைகளோ, பெரிய நிறுவன அமைப்புகளோ இயங்கவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ளவர்களின் வேலை வாய்ப்பு பறிபோய் உள்ளது.பிஜேபியோடு தமாகாகூட்டணி சேர்ந்தது தவறான முடிவாகும். தமாகா எந்த திசையில் செல்வது என ’பாதை தெரியாமல் திக்குமுக்காடி செல்கிறது.

தமிழக அரசு 18 போலீஸ் அதிகாரிகளை அவசர அவசரமாக பல்வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் திறமையான பல அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அஷஷதேவ் சுக்லா தேர்தல் பணியை கவனித்து வந்தார். அவரை மண்டபம், அகதிகள் முகாமுக்கு மாற்றியுள் ளார்கள். இந்த மாற்றம் ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாகும். நல்ல, திறமையான அதிகாரிகளை இவ்வாறு மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.