சென்னை, ஜூன் 1: சட்டவிரோதமாக மதுக்களை விற்றுவந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 295 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
எண்ணூர்-கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், எண்ணூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேற்றிரவு சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்துவந்த திருவொற்றியூரை சேர்ந்த வெள்ளை சாமி (வயது 47), திருத்தணியை சேர்ந்த தண்டபாணி, தேவக்கோட்டையை சேர்ந்த அழகர் சாமி (வயது 24) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 295 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடைகளில் இருந்து வாங்கிவந்து, அவ்வழியாக செல்லும் லாரி டிரைவர்களுக்கு மதுக்களை விற்றுவந்தது, விசாரணையில் தெரியவந்தது.