சிதம்பரம், ஜூன் 1: அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பொறியியல் புலத்தில் முதன்முறையாக இப்பயிற்சியை முதலாமாண்டு மாணவர்களுக்கு நான்கு வார பயிற்சியாக பொறியியல் புல வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) பேராசிரியர் என்.கிருஷ்ண மோகன் சிறப்புறையாற்றினார். பொறியியல் புல தலைவர் பேராசிரியர் கே.ரகுகாந்தன் தலைமையுரை யாற்றினார். பொறியியல் புலத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி பேராசிரியர் ஆர்.தனசேகர் நிகழ்ச்சியில் வரவேற்றார். பேராசிரியர் எல். லட்சுமிநரசிம்மன் நன்றி கூறினார்.