கடாரம் கொண்டான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற கமல்

சினிமா

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள படம் கடாரம் கொண்டான் இந்த படத்தில் விக்ரம் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கிரார். அவருடன் நாசரின் மகன் இளம் ஹிரோவாகவும், கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் இளம் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இந்த படத்தை இயக்கியுள்ளார். சென்னை மற்றம் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படபிடிப்பு தற்போது 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.

கடைசி நாள் படப்பிடிப்பிற்கு திடீர் என நடிகர் கமல் விசிட் செய்தார்.  படப்பிடிப்பு பற்றி இயக்குனர் மற்றும் விக்ரமிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் கமல் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த படம் விக்ரம் ரசிகர்களுக்கு மிகபெரிய ட்ரீட்டாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.