கொழும்பு, ஜூன் 2: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ராணுவ முகாமில் கண்ணிவெடி வெடித்தது. இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதி பலாலியில் படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் நேற்று மாலை சீரமைப்பு பணிகளை ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்த போது, அங்கு கல் ஒன்றை ராணுவ வீரர்கள் அகற்ற முற்பட்டனர்,

அப்போது அங்கிருந்து கண்ணிவெடி வெடித்தத்தில் ராணுவ வீரர் ஒருவர் பலியானர், மேலும் 2 வீரர்கள் இடுப்புக்கு கீழ் பகுதி முற்றிலுமாக சிதலமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பலாலி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.