சென்னை, ஜூன் 2: மக்கும் குப்பைகளை வீடுகளிலும், வணிக வளாகங்களிலும் உரமாக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வலியுறுத்தி உள்ளார். இதற்கான பயிற்சியை வழங்குமாறு மாநகராட்சி ஊழியர்களை அவர் அறிவுறுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆணையாளர் கோ. பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், சிறப்பு திட்டங்கள் துறையின் மழைநீர் வடிகால்வாய் பணிகள், சுகாதார துறையில் மேற்கொள்ளப்பட்டு சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து மறு சுழற்சி செய்யும் முறைகள் குறித்தும் ஆணையாளர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அவர¢பேசுகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5400 மெட்ரிக்டன் திடக்கழிவுகள் அகற்றப்படுகிறது. முதல் நிலை திடக்கழிவுகள் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களால் வீடுவீடாக சென்று சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கும் குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் நிலப்பரப்பிற்கு அனுப்பப்படுகிறது.

வீட்டுக்கு வீடு சென்று தரம்பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை சேகரிக்கும் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றார். எனவும்,அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பன்னடுக்கு கட்டங்கள்,உணவகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேரும் கழிவுகளை தங்களின்வளாகத்திற்குள்ளேயே பதனிடுதல் / மறுசுழற்சி செய்யப்பட்டு வருவதை தொடர்ந்துகண்காணிக்கவும் விடுப்பட்டவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி வீட்டிலேயே மக்கும் குப்பையை உரமாக மாற்றும் வசதியினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படும் குப்பைகளின் அளவினை குறைக்க தற்போது இயங்கி வரும் குப்பையினை மக்கச் செய்யும்தொழிலகங்கள் திறம்பாட்டுடன் இயக்குதல் மற்றும் அவற்றின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.