சென்னை,ஜூன் 2:  மத்திய அரசின் புதிய மும்மொழி கொள் கைக்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  பிஜேபி அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது. புதிய கல்வி கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே மும்மொழித்திட்டம் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியை கட்டாயப் பாட மாக்குவார்கள் என்று பொருள். சமஸ்கிருத மொழியை பரப்புவோம் என்று பிஜேபி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு ‘பாரதிய மொழி கலாசாரம்’.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.