சென்னை,ஜூன் 2:  ராயபுரம் மேற்கு கல் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்றிரவு இவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனம் மற்றும் மகளின் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

இது குறித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.