பிரேசில், ஜூன் 3: தன் மீது இளம் பெண் ஒருவர் கொடுத்துள்ள பாலியல் புகார், பணம் பறிப்பதற்காகவே நடக்கும் நாடகம் என கால்பந்துவீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். தற்போது பாரிஸ் செயின்ட் – ஜெர்மன் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனிடையே, கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் (மே) பாரிஸ் சென்றிருந்த நெய்மர், இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பழக்கமான இளம்பெண் ஒருவரையும் அங்கு வரவழைத்து,பின் அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நெய்மர் மீது புகார் கூறப்பட்டது.

இது குறித்து, அந்த பெண் (சாவ் பாலோ), போலீசில் அளித்த புகாரின்பேரில் நெய்மர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பாலியல் குற்றச்சாட்டை நெய்மர் மறுத்துள்ளார். தன்னிடம் இருந்து பணம் பறிக்க நடத்தப்படும் நாடகம்தான் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.