புதுச்சேரி, ஜூன் 3: புதுச்சேரி சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து இன்று பதவியேற்றுக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்தவர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 12 மணி அளவில் லாஸ்பேட்டை தொகுதி எம்எல்ஏ உன் துணை சபாநாயகருமான சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் இன்று காலை ஒன்பதரை மணியளவில் சட்ட மன்றத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்கு முதலமைச்சர் நாராயணசாமி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அமைச்சர்கள் ஷாஜகான் கந்தசாமி கமலக்கண்ணன் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு கொறடா அனந்தராமன் திமுக எம்எல்ஏ சிவா வெங்கடேசன் ஜெயமூர்த்தி தன வேலு தீப்பாய்ந்தாள் கீதா ஆனந்தன் விஜய தேனி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர் சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியை அதிமுக, என்ஆர்.காங்கிரஸ், பிஜேபி ஆகிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.