புதுடெல்லி, ஜூன் 3: புதுடெல்லியில் மெட்ரோ ரெயிலில் மற்றும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதலமைச்சர் அரவிந் கேஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார்.

இந்த திட்டம் இன்னும் 2, 3 மாதங்களில் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கான சாத்ய கூறுகள் குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்துகளை பொறுத்தவரை இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் இருக்காது, ஆனால் மெட்ரோ ரெயிலில் இதனை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

மெட்ரோ ரெயிலை பொறுத்தவரை அந்த திட்ட செலவை மத்திய அரசும், மாநில அரசும் சரிசமமாக பங்கேற்கின்றன. ஆகவே மத்திய அரசின் ஒப்புதலையும் பெற வேண்டிய அவசியம் உள்ளது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில¢ பரபரப்பாக பேசப்படுகிறது,