புதுடெல்லி, ஜூன் 3: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோத்தாவிடம் ஆன்லைனில் ஒரு லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர் லோத்தா. அவருடைய நண்பர் பி.பி.சிங். இவரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். அவருடன் மின் அஞ்சலில் லோத்தா அடிக்கடி கடிதங்கள் அனுப்புவார்.

திடீரென்று பி.பி.சிங்கிடம் இருந்து தனது உறவினர் ஒருவருக்கு சிகிச்சைக்காக ரூ, 1 லட்சம் தேவைப்படுவதாக மின் அஞ்சல் வந்தது.

அவரை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே மின் அஞ்சலில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்குக்கு ஒரு லட்சம் ரூபாயை அனுபபி வைத்தார்.

பி.பி.சிங்கின் மின் அஞ்சல் கணக்கை வேறொருவர் ஹேக் செய்து இந்த மோசடி நடைபெற்றுள்ள விஷயம் அம்பலமானது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து லோத்தா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.