சென்னை, ஜூன் 3: பள்ளிக்கரணையில் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவரும் மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
வேளச்சேரி அருகே வெள்ளக்கல் கலைஞர் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 30).

இவர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துபார்க்கும்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 4 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. இதேபோல் பெரும்பாக்கத்தில் சீனிவாசன் (வயது 40) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதேபகுதியில், ஹோட்டல் மேலாளர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நேற்று திருடப்பட்டது, குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளைக்கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் நடந்தேறிவரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.