செங்குன்றம், ஜூன் 3: செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி இன்று தொடங்கியது. தலைமை ஆசிரியர் பிரேம் குமாரி தேசிய கொடி ஏற்றினார். இன்றே மாணவிகளுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் வருகை இணையத்தில் பதிவு செய்யும் முறை தொடங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் சாமிநாதன். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய மாணவிகள் சேர்க்கை தொடங்கியது. முதல்நாள் பிரேயரில் மாணவிகள் விடுமுறை எடுக்காமல் வரவும். நன்றாக படிக்கவும் உறுதி எடுத்தனர்.