சென்னை, ஜூன் 3: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள கிறிஸ்டோபர் கலைக்கல்லூரி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் 44 வது திருவள்ளுவர் சிலையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமையில், சியோன் அண்ட் ஆல்வின் குழுமங்களின் தலைவர் முனைவர் விஜயன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது விஜிபி உலகத் தமிழச்சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு மற்றும் கல்லூரியின் தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பங்கேற்றனர்.