சென்னை, ஜூன் 3: நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் குட்கா சப்ளை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 10,000 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் ஆட்டோவில் கொண்டுவந்து குட்கா சப்ளை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதில், அங்கு ஆட்டோவில் வைத்து குட்கா சப்ளை நடந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, விற்பனையில் ஈடுபட்டுவந்த சூளைமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 42), பெரம்பலூரை சேர்ந்த ஏசுராஜா (வயது 42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஹான்ஸ், குட்கா உட்பட புகையிலை பொருட்கள் அடங்கிய 10,000 பாக்கெட்டுகள், ரூ.8,000 பணம் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.