நாட்டிங்காம், ஜூன் 4: நேற்றை போட்டியில் இங்கிலாந்திடம் போராடி வென்றதன் மூலம் ஒருநாள் அரங்கில் அடைந்த தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் அணி முற்றுப்புள்ளிவைத்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டி நாட்டிங்காமில் மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தது. பாபர் ஆஸம் (63), முகமது ஹஃபீஸ் (84), கேப்டன் சர்பிராஸ் (55) ஆகியோர் அரைசதம் கடந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சோபிக்காமல் இருந்தாலும், ஜோ ரூட் (107), ஜோஸ் பட்லர் (103) ஆகியோர் சதம் கடந்து அணியை வெற்றி பெறவைக்க முயற்சித்தனர். ஆனால், ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது வெற்றிக்கணக்கை தொடங்கியது.

மேலும், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கண்ட தொடர் தோல்விக்கும் (11 ஆட்டங்கள்) முற்றுப்புள்ளி வைத்தது.