சென்னை, ஜூன் 4:  மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு நாளை வெளியாக உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ். பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடந்து வருகிறது. இதனை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நீட் தேர்வின் முடிவுகள் நாளை (5-ம் தேதி) வெளியாகிறது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.