கார்டிஃப், ஜூன் 4: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது, அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டி கார்டிஃப்-ல் உள்ள சோஃபியா கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்துவருகிறது.