சவுதாம்டன், ஜூன்4: இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நேற்று திடீரென ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு திடீரென ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பும்ரா பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் பும்ராவை மட்டும் அழைத்துச் சென்றதாக மைதான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவருக்கு சிறுநீர் சோதனை, ரத்த பரிசோதனை என இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவு பற்றி இதுவரை எந்த தகவ லும் இல்லை. அதேசமயம், வேறு எந்த வீரருக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்தப் பட்டதா? என்ற விவரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த ஊக்க மருந்து சோதனையை, இந்திய கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) உறுதி செய்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்திய நட்சத்திர பவுலர் பும்ராவிற்கு மட்டும் ஊ ஊக்கமருந்து தொடர்பான பரிசோதனை நடந்துள்ள நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்களையும், சக வீரர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.