மும்பை, ஜூன் 4: இந்திய கிரிக்கெட் அணி 2019-20ம் ஆண்டில் உள்நாட்டில் விளையாட உள்ள தொடர்கள், தேதிகள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டில் இந்திய அணி 9 ஒருநாள், 5 டெஸ்ட் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.முதல்கட்டமாக செப்டம்பர் (செப்.15- அக். 23) மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்பின் வங்கதேசம் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது (நவ.3-26).

பின்னர், டிசம்பரில் இந்தியா வரும் வெ.இண்டீசுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது (டிச.6-11).  தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரின் (டிச.15-22) முதல் போட்டி டிச.15-ல் சென்னையில் நடக்கிறது.

அதன்பின்னர், 2020-ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு வரும் ஜிம்பாப்வே அணி 3 டி20 (ஜன.5-10), போட்டிகளில் விளையாடகிறது.  இதனைத் தொடர்ந்து, இந்தியாவரும் ஆஸ்திரேலியாவுடன் (ஜன,14- 19) வரையிலும், மீண்டும் இந்தியாவுக்கு வரும் தென் ஆப்பிரிக்க அணியுடன் (மார்ச் 12-18) வரையிலும் நடக்கும் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.