‘அருவி’ அருண்குமாருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்

சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து அவர் தயாரித்த இரண்டாம் தயாரிப்பான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தனது மூன்றாவது தயாரிப்பு குறித்த அறிவித்த சிவகார்த்திகேயன், இந்த படத்தை ‘அருவி’ இயக்குனர் அருண்பிரபு இயக்குவார் என்று கூறினார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் அருண்பிரபுவும் இணையும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார். ஷெல்லி ஒளிப்பதிவும், ரெய்மண்ட் கிராஸ்டா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்.

இவர்கள் இருவரும் அருண்பிரபுவின் ‘அருவி’ படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கி கூடிய விரைவில் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.