தேசிய அளவில் இப்தார் விருந்து இல்லை: காங்கிரஸ்

இந்தியா

புதுடெல்லி, ஜூன் 4: தேசிய அளவில் இந்த ஆண்டு இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தேசிய அளவில் கடந்த ஆண்டு அதன் தலைவர் ராகுல் காந்தி இப்தார் விருந்து அளித்தார். ஆனால், இந்த ஆண்டு அந்நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நதீம் ஜாவீத் கூறுகையில், தேசிய அளவில் இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மாநில அளவில் காங்கிரஸ் கட்சியின் பிரிவுகள் இந்நிகழ்ச்சியை நடத்தும் என்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் கட்சி இந்த முடிவ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.