விஜய் ஆண்டனி, அர்ஜூன் முதல்முறையாக இணைந்து நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. பின்னர் திடீரென இந்த படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேதியும் மாற்றப்பட்டு ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலை, திகில், சஸ்பென்ஸ், பரபரப்பு ஆகிய அம்சங்கள் நிறைந்த இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெகட்டிவ் ஹீரோவாக விஜய் ஆண்டனியும் போலீஸ் கேரக்டரில் அர்ஜூனும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகியாக ஆஷ்மிகாவும் மற்ற முக்கிய கேரக்டர்களில் நாசர், சீதா, சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர்களும் நடித்துள்ளனர். சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது,