சென்னை, ஜூன் 5:  உலக பால் தினத்தையொட்டி பாலின் நலன்பயக்கும் பலன்கள் குறித்து பிரசவிக்கவிருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி ஃபோர்டிஸ் மலர் மற்றும் கவின்கேர் மருத்துவமனை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

உலக பால் தினம் அனுசரிக்கப்படு வதையொட்டி, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மகப்பேறியல் துறையின் சிறப்பு முதுநிலை மருத்துவர் டாக்டர். நித்யா ராமமூர்த்தி , கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். மீனாட்சி நாராயணன் ஆகியோர் தலைமையேற்றனர்.  நிபுணர்கள், கருவில் வளர்கின்ற குழந்தை, ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை உருவாக்கிக் கொள்வதற்கு பாலை அதிகமாக தங்களது உணவுமுறையில் சேர்த்து அருந்துவதன் முக்கியத்துவம் குறித்த தங்களது மேலான கருத்துகளையும் கூறினர்.

உலக பால் தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக சென்னையில் விரைவில் தாய்மார்களாக ஆகவிருக்கும் பெண்களுக்காக நமது கலாச்சார மரபுப்படி நடைபெறுகின்ற வளைகாப்பு நிகழ்வையும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை நடத்தியது. இந்த விழிப்புணர்வு அமர்வில் பங்கேற்ற கருத்தரித்த பெண்களுக்கு அழகான சிகையலங்காரங்கள் செய்யப்பட்டதும் மற்றும் மெஹந்தி நிகழ்வும் அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.