விழுப்புரம், ஜூன்.5: ரம்ஜான் பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை.

இந்த பண்டிகையை இன்று தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.  விழுப்புரம் மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகளை அணிந்து பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம்கள் சென்று அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர்.