சிதம்பரம், ஜூன் 5: சிதம்பரம் நகராட்சியில் 22 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் சிதம்பரம் நகராட்சி தேர்வு நிலை நகராட்சி ஆகும் நகராட்சியில் வசூல் செய்யப்படும் வரியிலிருந்து நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் பல்வேறு திட்டங்களுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிதம்பரம் நகராட்சி ஆணையராக சுரேந்திர ஷா நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். மேலும் நகராட்சிக்கு வரி கட்டாத நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளுக்கு நோட்டீஸ் ஜப்தி நடவடிக்கை களை நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதன் மூலம் ரூ.22 கோடி வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.