சென்னை, ஜூன் 5: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் 2019 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 4வது காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் நிகர லாபம் 51.5கோடி யாக உள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கிண்டி, சர்தார் பட்டேல் ரோட்டில் 3வது தளத்தில் அலெக்சாண்டர் ஸ்குயர், கார்ப்போரேட் ஆபீசில் அமைந்துள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் 2019ம் ஆண்டின் 4-வது காலாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 3 சதவிதம் உயர்ந்து ரூ.116.3 கோடியாக உள்ளது.

நிகர லாபம் 58 சதவீதம் அதிகரித்து ரூ.51.5 கோடியாக உள்ளது. கடன்அனுமதி அளவு ரூ.972.8 கோடியாகவும், கடன் விநியோகஅளவு 878.1 கோடியாகவும் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் அளவு 3.9 சதவீதத்திலிருந்தும் 2.95 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதேபோல் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகரவட்டி வருவாய் 2 சதவீதம் உயர்ந்து ரூ.469.3கோடியாகவும் நிகரலாபம் 17 சதவீதம் உயர்ந்து ரூ. 234.6கோடியாகவும் இருக்கிறது என்று கூறினார்.