சென்னை, ஜூன் 5: வேளச்சேரியில் வீடு ஒன்றில் வைத்து பாலியல் தொழில் நடத்திவந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேளச்சேரி பேபி நகரில் உள்ள ஒருவீட்டில் பாலியல் தொழில் நடந்துவருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.

இது தொடர்பாக, வேலுரை சேர்ந்த பிரவீன் (வயது 24). பள்ளிக்கரணையை சேர்ந்த சந்தியா (வயது 30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அங்கிருந்த இரண்டு இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.  சென்னையில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்துவோரை குறிவைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.