இந்திய கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் ஜி.வி.பிரகாஷ்

சினிமா

கிரிக்கெட் விளையாட்டை பெருவாரியாக ரசிக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையானது. நடிகர்களை போன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் பல கோடி ரசிகர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

நடிப்பிலும், இசையிலும் முழு கவனம் செலுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பிஸியான நேரத்திலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இன்ப ஆச்சர்யத்தை அளிக்க ஆயத்தமாகிவிட்டார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு உற்சாகமும் உத்வேகமும் தரும் விதத்தில் ஒரு ஆன்தம் பாடலை வெளியிடவுள்ளார். இப்பாடல் இன்று வெளியாகவுள்ளது. பாடாலசிரியர் ஜி.கே.பி. இப்பாடலை எழுதியுள்ளார். இப்பாடலின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.