சென்னை, ஜூன் 5: இரமலான் திருநாளை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நேற்று மனித நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் இக்ரா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் பர்வீன் பானு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மதநல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.