டெல்லி, ஜூன் 6: உலகக்கோப்பை அரங்கில் அடியெடுத்து வைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகளை குவிக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், உலக கோப்பை தொடரில் தனது பயணத்தை தொடங்கியுள்ள ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள். இந்த தொடர், நல்ல போட்டிகளையும், விளையாட்டு வீரர்களுக்குரிய உத்வேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமையட்டும். போட்டிகளிலும் வெல்லுங்கள். அதன்மூலம், ரசிகர்களின் இதயங்களையும் வெல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.