வட மாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதிப்புயல்

இந்தியா

புதுடெல்லி, ஜூன் 6: வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதிப்புயல் வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. சில இடங்களில் மழை பெய்தும் வெப்பம் தணியவில்லை.

வட மாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று அரியானா, சண்டிகர், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் புழுதிப்புயலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.