விழுப்புரம், ஜூன் 6 கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங் கப்பட்டன. கோடை விடுமுறையை தொடர்ந்து தமிழகம் முழுவதும்ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் உள்ள 2,456 பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதுபோல் மாவட்டத்தில் உள்ள சுமார் 800 தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

இதையொட்டி நேற்று காலை சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்கள், பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். பின்னர் வீட்டில் இருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.

வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக நடந்த இறைவணக்கத்தில் கலந்துகொண்டு அனைத்து மாணவ- மாணவிகளும் வகுப்பிற்கு ஆர்வமுடன் சென்றனர். பள்ளிகள் தொடங்கிய முதல் நாளிலேயே நேற்று மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீரூடை வழங்கப்பட்டன.

அதன்படி மொத்தம் 4 லட்சத்து 6 ஆயிரத்து 241 மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.