7 மெட்ரோ நிலையங்களில் வாகன கட்டணம் அதிகரிப்பு

சென்னை

சென்னை, ஜூன் 6: சென்னையில் திருமங்கலம், அசோக்நகர், கிண்டி உள்ளிட்ட 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் வசதி நன்றாக இருப்பதால் சுற்றுப்புறங்களில் உள்ளவர்கள¢இருசக்கர வாகனங்களில் இங்கு வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு ரெயில்களில் பயணிக்கிறார்கள்.

தேவை அதிகரித்திருப்பதை தொடர்ந்து திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, கிண்டி, மண்ணடி, அசோக்நகர், நங்கநல்லூர் சாலை,மீனம்பாக்கம் ஆகிய நிலையங்களில் இருசக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் ரூ. 250-லிருந்து ரூ. 500 ஆகவும், கார்களுக்கான கட்டணம¢ ரூ. 1000 உயர்த்தப்பட்டுள்ளது.

விமான நிலைய ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.500 ஆகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரு.2000 ஆக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் இப்போது உயர்த்தப்படவில்லை.

மேலும் தினசரி வாகன நிறுத்த கட்டணமாக 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை நிறுத்தும் நேரத்திற்கு தகுந்தவாறு வசூலிக்கப்படுகிறது.

ஏர்போர்ட் ரெயில் நிலையத்திற்கு சுற்றுப்புற பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம் போன்ற இடங்களில் இருந்து ஏராளமானோர் வந்து வாகனங்களை நிறுத்தி விட்டு அண்ணா சாலையை நோக்கி ரெயிலில் பயணிப்பதால் இங்கு வாகன கட்டணம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பார்க்கிங் மூலம் கிடைத்து வந்த தினசரி வருவாய் ரூ.1.9 லட்சம் கட்டண உயர்வால் இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.