புதுவை, ஜூன் 6: புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தினம், புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அவருடைய நினைவைப் போற்றும் விதமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கங்காதரன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்