சென்னை, ஜூன் 6:  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூனிமேடு என்ற கிராமத்தை சேர்ந்த இவர், நேற்று மாலை நீட் தேர்வு முடிவு வெளியானதை பார்த்து ஏமாற்றம் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இவர், நாமக்கல்லில் உள்ள பள்ளியில் பிளஸ்1, பிளஸ்2 முடித்துள்ளார்.

நேற்று தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா, தேனி மாவட்டம் தி ஆண்டிப்பட்டியை சேர்ந்த ரித்துஸ்ரீ ஆகிய மாணவிகள் தீக்குளித்தும், விஷம் அருந்தியும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.