தாம்பரம், ஜூன் 6: சென்னை ரெயில்வே சரகத்தில் உள்ள காவல் நிலையங்கள்,பேருந்து நிலையங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவர்களை கண்டுபிடித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி தாம்பரம் இரயில்வே நிலையத்தில் நடைபெற்றது.

சென்னை ரெயில்வே சரகத்தில் உள்ள காவல் நிலையங்களான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் மனநலம் பாதிக்கப் பட்டும், அனாதை யாகவும் ஏராளமானோர் சுற்றித் திரிவதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்தபுகாரைத் தொடர்ந்து ரெயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு சுற்றித் திரிந்தவ ர்களை அழைத்து வந்து காப்பகத்தில் ஒப்படைக்கும் படி உத்திரவிட்டிருந்தார். அதன்படி நேற்று சென்னையில்அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை முழுவதும் 44 இடங்களில் சுற்றித்திரிந்த பெண்கள் உட்பட 96 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு புது ஆடை மற்றும் முடி திருத்தம், மருத்து வ உதவி மற்றும் உணவு கொடுத்து அவர்களின் பழைய அடையாளத்தை கொடுத்தனர்.

பின்னர் இன்று காலை மீட்கப்பட்ட 96பேரையும் ஆதரவற்ற இல்லத்தில் இரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் ஒப்படைத்தனர். ஆதரவற்ற இல்லத்திற்கு செல்ல விரும்பாதவர்கள் அவர்கள் கொடுத்த விலாசத்தில் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க படுவார்கள்என ரெயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு தெரிவிதார்.