காஞ்சிபுரம், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுலக வளாகத்தில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்திய மருத்துவர்கள் சங்கம் ஈஷா யோகா அமைப்பு, ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமுக்கு ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

உதவி கலெக்டர் சரவணன், முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பூபதி, யோகாநந்தன் ,மனோகரன், ஆதிரை, நேதாஜி, நிஷா, பிரியா, ஈஷா சுவாமிஜி ரபியா மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கோதைநாயகி, தாண்டவராயன், பரணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பொதுமக்களிடம் மரம் வளர்ப்பு பராமரிப்பு, பயன்பாடு,சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக மைதானத்தில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட மரக்கன்று கள் நடப்பட்டன . இதில் அரசு அலுலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.