காவல்துறை அலுவலகத்தில் 100 மரக்கன்றுகள் நட்டனர்

தமிழ்நாடு

தூத்துக்குடி, ஜூன் 6: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் 100 மரக்கன்றுகள் நட்டனர்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்போம், இயற்கையை சேமிப்போம், நம் வருங்கால சந்ததியினருக்கு உலகத்தை பாதுகாப்போம் என்பதன் அடிப்படையில், இதுபோன்று நாம் ஒவ்வொருவரும், குறைந்த பட்சம் ஆளுக்கொரு மரம் வளர்க்கவேண்டும் என்ற லட்சியத்துடன் மரங்கள் நடவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் பின்புறத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமையில் 100 மரங்கள் நடப்பட்டது.

இந்த மரம் நடுவிழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் உறைவிட தலைமை மருத்துவர் சைலஸ் ஜெயமணி கலந்து கொண்டு மரம் நட்டார். தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண் காணிப்பாளர் மாரியப்பன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன் உட்பட போலீசார் கலந்து கொண்டு 100 மரக்கன்றுகளை நட்டனர்.