விஷய், அஷித் படங்களுக்கு இசையமைக்க ஆசை: யோகான்

சினிமா

துருவங்கள் 16, மாயா போன்ற படங்களில் தனித்துவமான பின்னணி இசை மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோகான். இவர் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து நம்மிடம் கூறியதாவது:- நான் பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்தவன். எனது தாத்தா சேவியர் இசைக்கருவிகளை வாசித்து வந்தார்.

எனது அப்பா ராஜன், எம்எஸ்வி, கே.வி.மகாதேவன் ஆகியோரிடம் கிதார் கருவி வாசித்து வந்தார். அதனால் எனக்கும் இசை மது ஆசை ஏற்பட்டது. பிரபல இசையமைப்பாளர்கள் ஹாரீஸ் ஜெயராஜ், டி.இமான் ஆகியோர் பயின்ற இசை ஆசிரியரிடம் நானும் இசை கற்றுகொண்டேன். அப்போது தான் மாயா படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் துருவங்கள்-16, சிகை போன்ற படங்களுக்கு இசையமைத்தேன். இந்த படங்களில் என்னுடைய பின்னணி இசை பேசப்பட்டாலும் பாடல்கள் இல்லாதது வருத்தமளித்தது.  தொடர்ந்து ஹாரார் படங்கள் என்னை தேடி வந்தது, அதை மறுத்து விட்டு பேன்டசி, அட்வென்சர், பீரியட் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

தற்போது நரகாசுரன், இரவாகாலம் மற்றும் டாப்ஸி நடித்துள்ள கேம் ஓவர் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளேன். மேலும் மலையாளத்தில் ஒப்பம் என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளேன். கமலின் தீவிர ரசிகன் நான். எனவே ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்க ஆசை. அது நடக்குமா என தெரியவில்லை. அதே போல் முன்னணி ஹீரோக்கள் விஜய் , அஜீத் படங்களுக்கு இசையமைப்பதே என் எதிர்கால லட்சியம் என்றார்.