சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கீரா அத்வானி

சினிமா

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாகவும், சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்தவருமான கீரா அத்வானியை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி படமானதால் அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனம் எடுத்து நடித்து வருகிறார்.

கதை மற்றும் படத்தில் நடிப்பவர்கள் முதற்கொண்டு மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அடுத்து நான்கு இயக்குநர்களிடம் இணைந்து மிக வித்தியாசமான கதைகளில் நடிக்கிறார்.

தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனையடுத்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் ஃபேண்டஸி படத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து தன் நண்பர் விக்னேஷ் சிவன் படத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.  அந்தப்படத்தில் நடிக்க பாலிவுட் கவர்ச்சி நடிகை கீரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கீரா அத்வானி மிக தைரியமான பாத்திரங்களில் நடிக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.