அமெரிக்க சபாநாயகராக சென்னை பெண் தேர்வு

உலகம்

வாஷிங்டன், ஜூன் 6: சென்னையை சேர்ந்த பெண் அமெரிக்க சபாநாயகர் ஆனார். அமெரிக்க நாடாளுமன்றமான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையில் பிறந்து வளர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்றார்.

ஜனநாயக கட்சி எம்.பி. ஆன பிரமிளா ஜெயபால் தான் நாடாளுமன்ற கீழவை தலைவர் பதவியில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையில் பிறந்தவர். சிங்கப்பூரிலும், இந்தோனேசியாவிலும் கல்வி கற்றார். 1982-ல் அமெரிக்காவுக்கு குடியேறினார்.

அமெரிக்காவில் படிப்பை முடித்த இவர் அமெரிக்க கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் ஆவார். இடைக்கால தலைவராக இருக்கையில் அமர்ந்து பணியாற்றிய படங்களை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தலைவராக இன்று பொறுப்பு ஏற்றுள்ளேன்.

இந்த பதவியை ஏற்கும் முதல் தெற்கு ஆசிய பெண்ணாக பெருமைப்படுகிறேன். பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.