சென்னை, ஜூன் 6: தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் பெண் ஊழியரை வழிமறித்து 3 சவரன் செயினை மர்மநபர்கள் பறித்துச்சென்றுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (வயது 38). இவர், தனியார் தொலைக்காட்சியில் தனது வேலையை முடித்துவிட்டு, நேற்றிரவு பல்லவன்சாலை முத்துசாமி பாலம் அருகே தனது பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது, மற்றொரு பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர், ராஜஸ்ரீ அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.