சென்னை, ஜூன் 7: இலங்கையைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தைக்கு 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருக்குலைந்த முதுகெலும்பை அறுவை சிகிச்சை மூலம் சீர்செய்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

குழந்தை பிறவியிலேயே வளை முதுகுடன், இயல்புக்கு மாறான முதுகெலும்பு குறைபாடுடன் பாதிப்படைந்தது.  இந்த பிறவி கூன் என்பது, புதிதாக பிறக்கும் 10,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரும் நோய் ஆகும். இதற்கு சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால், இது மார்பு குழியின் வடிவத்தை மாற்றுவதுடன் நுரையீரல் இயல்புநிலையில் உருபெருவதை தடுக்கக்கூடும்.

இந்தக் குழந்தை சுவாசப் பிரச்சனைகள், மீண்டும் மீண்டும் ஏற்படும் மாரர்புத்தொற்று மற்றும் நடப்பதில் பிரச்சனை ஆகியவற்றுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சிறுமிக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான உருக்குலைவுகள் 90 டிகிரி அளவுக்கு முதுகெலும்பு வளைவை விளைவித்துள்ளது கண்டறியப்பட்டது என்று செய்தி வெளியீடு தெரிவிக்கிறது.

சிடி ஸ்கேன் படத்தின் உதவியுடன் 3டி அச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர்கள் முதுகெலும்பின் உடற்கூறியியல் 3டி மாடலை உருவாக்கினர்.
இவற்றைக்கொண்டு அறுவை சிகிச்சை எப்படி செய்வது என்று ஒத்திகை பார்த்ததுடன், திருகாணிகளை பொருத்துவதற்கு ஒரு வழி செய்வதற்கு ஒரு வார்ப்பையும் (அச்சு) உருவாக்கினார் என்று செய்தி வெளியீடு தெரிவிக்கிறது.

சிறுமியுடைய முதுகெலும்பு நேராக்கப்பட்டதன் விளைபயனாக சிறுமியின் 2.5 அங்குலம் வளர்ச்சி கண்டதுடன் அவளுடைய 90 டிகிரி வளைவு, 60 டிகிரி அளவுக்கு சீர்செய்யப்பட்டது. சிறுமியை சீராக்கி கொடுத்து மருத்துவர்களின் சாதனைக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன் பாராட்டினர்.