சென்னை ஜூன் 7: இதய நோய் சிகிச்சை குறித்து இதயநோய் நிபுணர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜூன் 8,9 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
2019 ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வதேச வல்லுநர்கள் இந்திய இதய நோய் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை வல்லுநர்களிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். சர்வதேச நிபுணர் குழுவில் டாக்டர் சுஷில் கோடாலி உள்ளார்.

இவர் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதய அமைப்பியல் மற்றும் வால்வு மையத்தின் இயக்குநர் ஆவார்.  இந்த உச்ச மாநாட்டில் தேசிய அளவிலான நிபுணர் குழுவில் டாக்டர் ஏ.பி.மேத்தா (மும்பை ஜலஸ்க் மருத்துவமனை இதய நோய் பிரிவு இயக்குநர்), டாக்டர் அஜித் முல்லசாரி, (மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இதய நோய் பிரிவு இயக்குநர்), டாக்டர் மாத்யூ சாமுவேல் (சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைப் பிரிவு இயக்குநர்) உள்ளிட்ட நட்சத்திர அந்தஸ்து பெற்ற முன்னணி நிபுணர்கள் இடம்பெறுகின்றனர்.

இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு பயிலரங்கத்தில் 400-க்கு மேற்பட்ட இதய நோய் சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து சிறந்த மருத்துவ சிகிச்சை நடைமுறைகள் குறித்து ஆலோசித்து தங்களது கருத்துகளை பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.

பாரம்பரியமாக வால்வு நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் தற்போது நவீன இதய நோய் சிகிச்சை தொழில் நுட்பத்தில் வால்வு சிகிச்சைகள் டிரான்ஸ்கேதடர் நடைமுறைகள் மூலம் மேற்கண்டவாறு அப்போலோ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.