விழுப்புரம், ஜூன் 7: உலக நன்மைவேண்டியும், மழை வேண்டியும் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கர விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரிலுள்ள ஸ்ரீராம் பள்ளியில் கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திண்டிவனம் அடுத்த ஓமந்தூரி அமைந்துள்ள ஸ்ரீராம் பள்ளியில் இந்து சமய கலை கலாசார விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கர விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினர். 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவின் தொடக்கமாக நிகழ்ச்சியாக உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் விஜேயேந்திர சுவாமிகள் தலைமையில் கோ பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் 500 மேற்பட்ட பசுகளை வைத்து வழிப்பட்டனர். பள்ளியில் நடைபெற்ற இந்த கோ பூஜை விழாவில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  500 க்க மேற்பட்ட பசுக்கள் பங்கேற்ற இந்த பூஜையில் திரளமான பொதுமக்கள் பங்கேற்றுகோமாதாவை வணங்கிசென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முரளி ரகுராமன் , வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ரகுராமன்,பள்ளி முதல்வர் ராமு,பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தரிசனம்செய்தனர்.