நாட்டிங்காம், ஜூன் 7: தான் இத்தனை ரன்கள் எடுப்பேன் என நினைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டர் நைல் தெரிவித்துள்ளார்.

வெ.இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய வீரர் நாதன் கூறுகையில், நான் இவ்வளவு அடிப்பேன் என நினைக்கவில்லை. பயிற்சியின் போது ஸ்மித் 81 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் நான் எதுவும் அடிக்கவில்லை. அதனால் நான் ஸ்மித் உடன் சிறிது நேரம் களத்தில் நிற்க நினைத்தேன். நான் அடித்த இரண்டாவது பந்து மேலே சென்றது. ஆனால் நல்ல வேளையாக அது கேட்சாக ஆகவில்லை. அதுபோன்று சில பந்துகள் இருந்தது. சில பந்துகள் எட்ஜில் பட்டு சென்றது. இப்படி எனது பேட்டிங் சென்றது.

நாங்கள் மீண்டும் எங்கள் நிலைக்கு திரும்பியுள்ளோம். எங்கள் அணியில் இரண்டு உலக தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள். எனவே நாங்கள் யாரையும் எதிர்த்து வெற்றி பெறுவோம். மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தது ஃபின்ச் எடுத்த நல்ல முடிவு. ஸ்டார்க் ஒரு பிரமாதமான பவுலர் என்பதால் அனைத்து பாராட்டுக்களும் அவரை சேரும். அதேசமயம், கம்மின்ஸும் சிறப்பான பவுலர்தான், என்றார்.